நேபாள வெள்ளத்தில் ஆந்திரத்தைச் சேர்ந்தவர் மாயம்! குடும்பத்தினர் தவிப்பு!
ஆந்திர மாநிலம் குப்பம் நகரைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளதைப் பற்றி...
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலம் குப்பம் நகரைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதிலிருந்து, ஆந்திரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவரை தொடர்புகொள்ள முடியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஈஷா அறக்கட்டளையுடன் தொடர்புடைய ஒரு குழுவுடன் பாலசுப்ரமணியம் நேபாளத்திற்குச் சென்றிருந்ததாக அவரது சகோதரர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
தகவல் தொடர்பை முடக்கிய திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து ஆகஸ்ட் 26 முதல் நேபாளத்தில் சென்ற எனது சகோதரர் பாலசுப்ரமணியம் காணாமல் போயுள்ளார். அவரது தொலைபேசி செயல்படாததால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
பாலசுப்ரமணியம் ஆகஸ்ட் 14 அன்று காத்மாண்டுவிலிருந்து நேபாளத்திற்குப் புறப்பட்டதாகக் கூறிய அவரது சகோதரர், செவ்வாய்க்கிழமை காலை அவர் கடைசியாகத் தொடர்பு கொண்டபோது எல்லாம் நலமாக இருப்பதாகவும், ஆகஸ்ட் 29 அன்று அந்தக் குழு ஹைதராபாத் வந்து சேரும் என்றும் கூறியதாகத் தெரிவித்தார்.
புதன்கிழமை காலை அந்தக் குழு 'கியிரோங்' குடியேற்ற மையத்தில் இருந்ததாகவும், அப்பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகவும் குடும்பத்தினருக்குத் தெரியவந்தது.
குடும்பத்தினர் முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவின் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பாலசுப்ரமணியம் இருக்கும் இடம் குறித்து இந்தியத் தூதரகம் மற்றும் அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிந்து உதவ அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக உதவி எண்களை வழங்கியுள்ளதாகவும் ஸ்ரீகாந்த் கூறினார். அந்த உதவி எண்கள் மூலம் குடும்பத்தினரும் தங்கள் சகோதரர் குறித்த தகவல்களைப் பெற முயன்று வருகின்றனர்.
இதற்கிடையில், புது தில்லியில் உள்ள ஆந்திர பவன் வெளியிட்ட அறிக்கையின்படி,
நேபாள ராணுவம், காவல்துறை மற்றும் ஆயுதமேந்திய காவல் படை வீரர்கள் சுமார் 15 ஹெலிகாப்டர்கள் மூலம் பெரிய அளவிலான மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய விமானப்படையின் C-130J ரக விமானம் மூலம் நேபாளத்திற்கு 10 டன் அளவிலான நிவாரணப் பொருள்களை அனுப்பி, மனிதாபிமான உதவியை இந்தியா வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்களைக் கண்டறிதல், மீட்புப் பணிகள் மற்றும் பாதுகாப்பான வெளியேற்றம் ஆகியவற்றுக்காக, இந்தியத் தூதரகங்கள், நேபாள மற்றும் சீன அதிகாரிகள், யாத்திரை அமைப்புகளுடன் ஏபி பவன் தொடர்ந்து ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.