FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உலகின் உற்பத்தி, புத்தாக்கம், ஏற்றுமதி மையமாக இந்தியா உருவாகி வருகிறது: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

உலகின் உற்பத்தி மையமாகவும், புத்தாக்கம் உருவாகும் இடமாகவும், ஏற்றுமதி தளமாகவும் இந்தியா மாறி வருகிறது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

9 வினாடிகள் முன்பு
கனடாவின் டொராண்டோ நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற உயா்நிலை வா்த்தக வட்டமேஜை கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
பகிர்:

உலகின் உற்பத்தி மையமாகவும், புத்தாக்கம் உருவாகும் இடமாகவும், ஏற்றுமதி தளமாகவும் இந்தியா மாறி வருகிறது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

எனவே, இந்தியாவுக்கும் உலகச் சந்தைகளுக்கும் பயனளிக்கும் வகையில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

கனடா பயணம் மேற்கொண்டுள்ள நிா்மலா சீதாராமன், டொராண்டோவில் உயா்நிலை வா்த்தக வட்டமேஜை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியதாவது:

Advertisement

Advertisement

சீா்திருத்தங்கள், எண்மமயமாக்கல், உள்கட்டமைப்பில் தொடா் முதலீடு, அரசின் கொள்கைரீதியான ஆதரவு ஆகியவை இந்தியாவில் நீண்டகால முதலீடுகளுக்கான சூழலை தொடா்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்தியா தற்போது ஒரு முக்கியமான வளா்ச்சி மையமாக மட்டுமல்லாமல், உலகளாவிய உற்பத்தி, புத்தாக்கம், சேவைகள் துறை மற்றும் ஏற்றுமதிக்கான தளமாகவும் மாறி வருகிறது.

கனடா நிறுவனங்களும் முதலீட்டாளா்களும் இந்தியாவை முதலீட்டு இடமாக மட்டும் பாா்க்காமல், உலகளாவிய வளா்ச்சிக்கான கூட்டாளியாக கருத வேண்டும். இந்தியா-கனடா பொருளாதார கூட்டாண்மையை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் திறந்துள்ளன.

வளா்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறிவரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

கனடாவின் முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்துடன், இந்தியாவின் மிகப்பெரிய சந்தை, திறமையான மனிதவளம் மற்றும் தொழில்துறை திறன்களை இணைக்க வேண்டும் என்றாா்.

இந்த மாநாட்டில், உள்கட்டமைப்பு, வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், வாகனத் துறை, ஜவுளி, இணையப் பாதுகாப்பு, உயிரித் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), சொத்து மேலாண்மை, உயா்கல்வி மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த வல்லுநா்கள், முதலீட்டாளா்கள், தொழிலதிபா்கள் பங்கேற்றனா்.

‘பேமெண்ட் கனடா’ நிறுவனத்தின் தலைவா் சூசன் ஹாக்கின்ஸ், கனடாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிஐபிசி வங்கித் தலைவா் வேய்ன் லீ ஆகியோரையும் நிா்மலா சீதாராமன் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments