FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கான்பூர் அருகே பயிற்சி விமானம் விபத்து! 2 விமானிகள் பலி!

கான்பூர் அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலியாகினர்.

கான்பூர் அருகே பயிற்சி விமானம் விபத்து - பிடிஐ
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பயிற்சி விமானம் ஒன்று கங்கை ஆற்றங்கரையோரம் விழுந்து நொறுங்கியதில், இரண்டு விமானிகளும் பலியாகினர்.

இரட்டை என்ஜின் கொண்ட நான்கு பேர் அமரும் பயிற்சி விமானம் ஒன்று, கங்கை ஆற்றங்கரையோரம் விழுந்து நொறுங்கியதில், விமானியும் துணை விமானியும் பலியாகியுள்ளனர்.

பலியானவர்களில் ஒருவர் பயிற்சியாளர் என்றும், மற்றொருவர் பயிற்சி பெறும் மாணவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

குஜராத்தைச் சேர்ந்த சச்சின், கர்நாடகத்தைச் சேர்ந்த அபிஷேக் ஆகியோர் இன்று காலை 11.30 மணியளவில் கார்க் விமானப் பயிற்சி நிறுவனத்திலிருந்து பயிற்சி விமானத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். 11.50 மணிக்கு விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

பயிற்சி கொடுக்கும் விமானி, இதுவரை 3000 மணி நேரங்கள் பறந்து அனுபம் கொண்டவர் என்றும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புற்களும் மரங்களும் நிறைந்த ஓரிடத்தில் விமானம் விழுந்து சுக்குநூறாக நொருங்கிக் கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. விமானத்தின் உலோகப் பாகங்கள்கூட மிக மோசமாக சேதமடைந்துள்ளன. விமானத்தின் இறக்கைகள் உடைந்திருப்பதைப் பார்க்கும்போது விமானம் மிக வேகமாக வந்து தரையில் மோதியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விமானம் தரையில் விழுந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விமானிகளின் குடும்பத்தாருக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் தன்னுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments