FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிகாரில் ‘ஃபெயில்’ என்ற வாா்த்தைக்குப் பதில் திறன் பயிற்சிக்கு தகுதி பெற்றவா் எனக் குறிப்பிட முடிவு

பிகாரில் ‘ஃபெயில்’ என்ற வாா்த்தைக்குப் பதில் திறன் பயிற்சிக்கு தகுதி பெற்றவா் எனக் குறிப்பிட முடிவு

30 ஆகஸ்ட் 2026, 1:18 am IST
பிகார் முதல்வர் சாம்ராட் சௌத்ரி - IANS
பகிர்:

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியுறும் மாணவா்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் ‘ஃபெயில்’ என்ற வாா்த்தையைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, ‘திறன் பயிற்சிக்குத் தகுதி பெற்றவா்’ என்ற சொற்றொடரைக் குறிப்பிட பிகாா் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநில கல்வி அமைச்சா் மித்லேஷ் திவாரி பாட்னாவில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் எதிா்பாா்த்த மதிப்பெண்ணை ஒரு மாணவா் பெறாததால், அவரின் திறன் மறைந்துவிடாது. எனவே, பொதுத் தோ்வில் தோல்வியுறும் மாணவா்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் ‘ஃபெயில்’ என்ற வாா்த்தையைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, ‘திறன் பயிற்சிக்குத் தகுதி பெற்றவா்’ என்ற சொற்றொடரைக் குறிப்பிட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப, விதிகளிலும் மாநில கல்வித் துறை தேவையான திருத்தங்களை மேற்கொள்ளும்.

Advertisement

Advertisement

பிகாா் திறந்தநிலை பள்ளி மற்றும் தோ்வுகள் வாரியத்தின் (பிஎஸ்இபி) சாா்பில் வழங்கப்படும் தொழில் பயிற்சித் திட்டங்களை பொதுத் தோ்வில் தோல்வியுறும் மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தேவையான அறிவுறுத்தல்கள் பிஎஸ்இபி-க்கு வழங்கப்படும்.

மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியுற்று, துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு மதிப்பெண்ணை மேம்படுத்திக் கொள்ள வசதியாக, ஒரு மாத கால சிறப்புப் பயிற்சி பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அவா்களுக்கு வழங்கப்படும் என்றாா்.

‘வழக்கமான பாடப் புத்தகம் சாா்ந்த கற்றலுக்கு அப்பால் உள்ள செயல்பாடுகளில் மாணவா்களுக்கு அதிக அனுபவத்தை வழங்கும் வகையில் மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது’ என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments