பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.. பேரவைத் தலைவர் அறிவுறுத்தல்! ஏன்? எதற்கு?
பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை என்று கூறி, பேரவைத் தலைவர் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
பேரவையில் விதி எண் 55, 56ன் கீழ் அறிவிப்புகள் அனுமதிக்கப்படுவதற்கு முன் சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் வெளியிட அனுமதிக்க முடியாது என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் பேசுகையில், பேரவைக்கு ஒரு அறிவிப்பை வெளியிட நான் விரும்புகிறேன். சட்டப்பேரவை விதி எண் 55, 56 போன்ற அறிவிப்புகள் பேரவையின் செயலர் அல்லது பேரவைத் தலைவர் அனுமதித்து பிறகு விவாதிக்கலாம்.
ஆனால், சில உறுப்பினர்கள் பெயரை இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை. அறிவிப்புகளை எழுதி உடனடியாக யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களுக்குக் கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
பேரவை உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட பெயரில் உள்ள சமூக வலைத்தளத்தில் அவற்றை வெளியிடுகிறார்கள்.
பேரவைத் தலைவரை அனுமதிக்கப்படும் வரை அவற்றை வெளியிடுவது விதிகளுக்கு முரணானது. அது குறித்து பேரவை விதி எண் 36 உள்பிரிவு 5 தெளிவாகக் குறிப்பிடுகிறது.
அதன்படி, பேரவைத் தலைவர் அனுமதித்து உறுப்பினர்களுக்கு அனுப்பாத வரை அதனை உறுப்பினரோ, வேறு யாரும் வெளியிடக் கூடாது. எனவே இன்று முதல் தொலைக்காட்சி, ஊடகங்கள் உள்பட அனைத்துக்கும் சேர்த்தே சொல்கிறேன், அவ்வாறு இதில் பேரவை உறுப்பினர்கள் யாராவது இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டால் பிரசுரிக்கவும் கூடாது, வெளியிடவும் கூடாது.
எனவே அனைவரும் பேரவை விதிக்கு உள்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
Did not wish to disclose the name... Speaker's directive! Why? For what reason?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.