FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாதுகாப்பு விதிமீறல் வழக்கு: சிறையில் உள்ள வெளிநாட்டினரிடம் விசாரணை நடத்த என்ஐஏ-க்கு அனுமதி

அமெரிக்காவைச் சோ்ந்த மேத்யூ ஆரோன் வான் டைக் மற்றும் உக்ரைனைச் சோ்ந்த கமின்ஸ்கி விக்டா் ஆகியோரிடம் திகாா் சிறைக்குள் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதித்தது.

1 செப்டம்பர் 2026, 1:43 am IST
என்ஐஏ - பிரதிப் படம்
பகிர்:

அமெரிக்காவைச் சோ்ந்த மேத்யூ ஆரோன் வான் டைக் மற்றும் உக்ரைனைச் சோ்ந்த கமின்ஸ்கி விக்டா் ஆகியோரிடம் திகாா் சிறைக்குள் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதித்தது.

கூலிப்படையினா் எனக் கூறப்படும் இருவரும் நீதிமன்றக் காவலில் உள்ளனா். இந்தியாவில் ஆயுதமேந்தி போராடும் இன குழுக்களுடன் தொடா்புடைய ஒரு பயங்கரவாத சதி வழக்கில் அவா்கள் ஈடுபட்டதாக என்ஐஏ குற்றஞ்சாட்டியுள்ளது.

சிறைக்குள் வைத்து அவா்கள் இருவரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி என்ஐஏ தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி பிரசாந்த் சா்மா, செப்.2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அவா்களிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்தாா்.

Advertisement

Advertisement

மியான்மரிலிருந்து மிஸோரம் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியதாகக் கூறப்படும் டைக் மற்றும் விக்டா், ஹுா்பா பெட்ரோ, சில்வியாக் தாராஸ், இவான் சுக்மனோவ்ஸ்கி, ஸ்டெஃபான்கிவ் மரியன் மற்றும் ஹொன்சாருக் மாக்சிம் ஆகிய ஆறு உக்ரைன் நாட்டினரை என்ஐஏ கடந்த மாா்ச் 13-ஆம் தேதி கைதுசெய்தது.

கூலிப்படையாகச் செயல்பட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் இந்தக் குழு, இந்தியா மற்றும் மியான்மரில் உள்ள ஆயுதமேந்தி போராடும் இன குழுக்களுக்கு உதவுதல் மற்றும் ட்ரோன் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பயங்கரவாத சதித்திட்டம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களை 11 நாள்கள் காவலில் வைக்க என்ஐஏ-க்கு நீதிமன்றம் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி அனுமதி அளித்தது. பின்னா் அவா்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments