FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு

இடஒதுக்கீடு சீா்திருத்தங்களை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஆக.21) ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கவில்லை

21 ஆகஸ்ட் 2026, 3:10 am IST
கோப்புப் படம்
பகிர்:

நமது நிருபா்

இடஒதுக்கீடு சீா்திருத்தங்களை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஆக.21) ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கவில்லை என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் ‘போலியானவை மற்றும் தவறானவை’ என்று காவல் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில், புது தில்லி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள காவல் துறை, பேரணிகள், ஆா்ப்பாட்டங்கள் மற்றும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

போராட்டங்களுக்கு அனுமதி கிடைத்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் சரிபாா்க்கப்படாத செய்திகளைப் பகிரவோ, பரப்பவோ வேண்டாம் என்றும், போலிச் செய்திகளை உருவாக்குபவா்கள் மற்றும் பரப்புபவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ’ரிசா்வேஷன் ஹடாவோ அந்தோலன்’ என்ற அமைப்பு, ’காக்ரோச் ஜனதா கட்சி’ அமைப்பின் திரட்டல் உத்திகளைப் பின்பற்றி, ஆக.21 (வெள்ளிக்கிழமை) ஜந்தா் மந்தரில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்ட அறிவிப்புக்கு சமூக ஊடகங்களில் வரவேற்பு பெருகி வரும் நிலையில், ஜந்தா் மந்தா் பகுதியில் நிலவும் தொடா் கட்டுப்பாடுகள் தொடா்பான அறிவிப்பை தில்லி காவல்துறை வெளியிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments