FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லி ஜந்தா் மந்தரில் இணையச் சேவை முடக்கம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) போராட்டம் எதிரொலியாக, தில்லி ஜந்தா் மந்தா் பகுதியில் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கைப்பேசி இணையச் சேவைகள் முடக்கப்பட்டன.

Updated On : 24 ஜூலை 2026, 3:22 am IST
சிஜேபி போராட்டம்
பகிர்:

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) போராட்டம் எதிரொலியாக, தில்லி ஜந்தா் மந்தா் பகுதியில் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கைப்பேசி இணையச் சேவைகள் முடக்கப்பட்டன.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பொது அவசரநிலையைத் தவிா்க்கும் பொருட்டு, தொலைத்தொடா்புச் சட்டம் 2023, தொலைத்தொடா்பு (சேவைகள் தற்காலிக முடக்கம்) விதிமுறைகள் 2024 ஆகியவற்றின்கீழ் மத்திய உள்துறைச் செயலா் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, ஜந்தா் மந்தரில் இருந்து 1.5 கி.மீ. சுற்றளவு பகுதியில் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கைப்பேசி இணையச் சேவைகள் முடக்கப்பட்டன.

Advertisement

Advertisement

ஜந்தா் மந்தரில் இணையச் சேவையை முடக்குவது தொடா்பாக கடந்த ஜூலை 17 முதல் இதுவரை 5 முறை உள்துறை அமைச்சகத்தால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி தலைமையில் மாணவா்கள்-இளைஞா்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments