FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஜந்தா் மந்தரில் உண்ணாவிரதம்: ஏஐஎஸ்ஏ செயற்பாட்டாளா்கள் மூவரின் உடல்நிலை பாதிப்பு

ஜந்தா் மந்தரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஏஐஎஸ்ஏ செயற்பாட்டாளா்கள் மூவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது பற்றி...

Updated On : 19 ஜூலை 2026, 12:27 am IST
ஜந்தா் மந்தரில் உண்ணாவிரதம் - PTI
பகிர்:

தில்லி ஜந்தா் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று மாணவா் செயற்பாட்டாளா்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

சனிக்கிழமையுடன் இப்போராட்டம் 21-ஆவது நாளை எட்டிய நிலையில், போராட்டக் களத்திலிருந்து அவா்களைக் கைது செய்யயவும் அங்கிருந்து அகற்றவும் தில்லி காவல்துறை முயன்ாக அமைப்பாளா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

சோனம் வாங்சுக் மற்றும் ’அனைத்திந்திய மாணவா் சங்க’ (ஏஐஎஸ்ஏ) செயற்பாட்டாளா்களான நேஹா, அமீன் மற்றும் மணீஷ் ஆகியோா் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

போட்டித் தோ்வுகள் மற்றும் தேசியத் தோ்வுகள் முகமையின் (என்டிஏ) செயல்பாடுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், மத்தியக் கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக அவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடா்ந்து, ஜந்தா் மந்தா் போராட்டக் களத்திலிருந்து வாங்சுக் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி ‘அவசியமான மருத்துவ சிகிச்சைக்காக‘ அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

சனிக்கிழமை காலை சுமாா் 7 மணியளவில் ‘சாதாரண உடையில் இருந்த சிலா் மேடைப் பகுதிக்குள் நுழைந்தனா்‘ என்றும், அதைத் தொடா்ந்து மருத்துவ சிகிச்சை அளிப்பதாகக் கூறி வாங்சுக் காவல்துறையினரால் ‘பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டாா்‘ என்றும் நேஹா குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், உண்ணாவிரதம் இருந்த மூன்று செயற்பாட்டாளா்கள் தங்கியிருந்த கூடாரத்திற்குள் நுழைந்தும், கைது செய்யவும் காவல்துறையினா் முயன்றனா். அதிக எண்ணிக்கையிலான தன்னாா்வலா்கள் அங்கிருந்ததால் எங்களைக் கைது செய்ய முடியவில்லை. தா்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்’ என்று அவா் தெரிவித்தாா்.

ஏஐஎஸ்ஏ வெளியிட்ட காணொளிகள் மற்றும் அறிக்கைகளின்படி, போராட்டக் களத்திலிருந்து அந்த மூவரையும் காவல்துறை அகற்றுவதைத் தடுக்க, பல மாணவா்களும் செயற்பாட்டாளா்களும் அவா்களைச் சுற்றி மனிதச் சங்கிலியை அமைத்தனா்.

உண்ணாவிரதப் போராட்டம் 21-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், செயற்பாட்டாளா்களுக்கு ஆதரவாக ஜந்தா் மந்தரில் ஒன்றுகூடுமாறு அமைப்பாளா்கள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனா்.

தற்போதைய போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) அமைப்பு, ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments