ஹரியாணா ராட்டின விபத்தில் பலியான ஆய்வாளர் காவலர் பதக்கம் வென்றவர்
ஹரியாணா ராட்டின விபத்தில் பலியான காவல் ஆய்வாளர் 2020 இல் காவலர் பதக்கம் வென்றவர் எனத் தெரிய வந்துள்ளது.
ஹரியாணா ராட்டின விபத்தில் பலியான காவல் ஆய்வாளர் 2020 இல் காவலர் பதக்கம் வென்றவர் எனத் தெரிய வந்துள்ளது.
58 வயதான காவல் ஆய்வாளர் ஜகதீஷ் பிரசாத், 2019-20 ஆம் ஆண்டில் ஹரியாணா ஆளுநரிடமிருந்து காவலர் பதக்கம் பெற்றவர். 1989 ஆம் ஆண்டு ஹரியாணா ஆயுத படையில் சேர்ந்த பிரசாத், 36 ஆண்டுகள் பணியில் இருந்து வந்துள்ளார்.
வரும் மார்ச் மாதத்துடன் ஓய்வு பெறவிருந்த நிலையில் நேற்று ஏற்பட்ட ராட்டின விபத்தில் பலியானது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பலியான ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று அம்மாநில டிஜிபி அஜய் சிங்கால் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
அதேசமயம், விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது ஆபத்தில் இருந்து மீண்டுவிட்டதாக சுற்றுலா அமைச்சர் அரவிந்த் சர்மா தெரிவித்தார். ஹரியாணா மாநிலம், சூரஜ்குன்ட் கண்காட்சியில் சனிக்கிழமை ராட்சத ராட்டினம் திடீரென சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பணியில் இருந்த காவல் அதிகாரி ஒருவர் பலியானார்.
மேலும் 13 பேர் காயமடைந்தனர்.விபத்து தொடர்பான விடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தகவல் கிடைத்ததும் மாவட்ட துணை ஆணையர் ஆயுஷ் சின்ஹா, சுற்றுலா மேலாண்மை இயக்குனர் பார்த் குப்தா ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மாலை 6 மணியளவில் சுமார் 15 பேருடன் ராட்டினம் திடீரென சரிந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
Jagdish Prasad, the 58-year-old on-duty police inspector who died trying to save people at the Surajkund fairgrounds after a giant swing snapped mid-air and collapsed, was awarded the Police Medal by the Haryana governor in 2019-20.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.