மூணாற்றில் காரை தாக்கிய காட்டு யானை: காயமின்றி தப்பிய இருவர்!
மூணாற்றில் சாலையில் சென்றுகொண்டிருந்த காரை காட்டு யானை தாக்கியதில் அதில் பயணித்த இருவர் காயமின்றி தப்பினர்.
மூணாற்றில் சாலையில் சென்றுகொண்டிருந்த காரை காட்டு யானை தாக்கியதில் அதில் பயணித்த இருவர் காயமின்றி தப்பினர்.
கேரள மாநிலம், மூணாறு-மறையூர் சாலையில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் காட்டு யானை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியது. யானை, முதலில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பேருந்தை நெருங்கி அதன் பக்கவாட்டு கண்ணாடிகளில் ஒன்றை உடைத்தது. பின்னர் அது சாலையில் சென்ற காரை தடுத்தது.
பின்னர் காரின் முன்பக்கக் கண்ணாடியை யானை உடைத்ததோடு மேற்கூரையையும் சேதப்படுத்தியது. இந்த சம்பவத்தின்போது மற்றொரு பயணியுடன் ஓட்டுநரும் உள்ளேயே இருந்ததால் காயமின்றி தப்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வனத் துறைக்கு தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்தது.
Advertisement
Advertisement
படையப்பா என்று அழைக்கப்படும் காட்டு யானை இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்தப் பகுதியில் அடிக்கடி சுற்றித் திரியும் யானை படையப்பாவின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வன அதிகாரிகள் கூறினர்.
A car was damaged after a wild elephant attacked vehicles on the Munnar-Marayoor road, forest officials said on Sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.