மருத்துவர்கள் மீது அதிக 'அனுதாபமும் ஆதரவும் தேவை': எய்ம்ஸ் இயக்குநர் வலியுறுத்தல்
மருத்துவர்கள் மீது அதிக 'அனுதாபமும் ஆதரவும் தேவை' என எய்ம்ஸ் இயக்குநர் வலியுறுத்தியிருப்பது தொடர்பாக...
புது தில்லி: மருத்துவர்கள் மீது அதிக 'அனுதாபமும் ஆதரவும்' தேவை என வலியுறுத்தியுள்ள எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் நிகில் டாண்டன், நோயாளிகளை முழுமையாக குணப்படுத்த மருத்துவர்களுக்கு அர்ப்பணிப்புடன் கூடிய மனிதநேய அணுகுமுறை அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் புதன்கிழமை(ஜூலை 1) 'மருத்துவர்கள் நாள்' கொண்டாடப்பட்ட நிலையில், மருத்துவர்களும் மனிதர்களே என்பதால், சக மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து அவர்களுக்கு ஆதரவு தேவை என்பதையும் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
மருத்துவர்களும் தங்களைப் போலவே மனிதர்கள்தான் என்பதை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் முடிவெடுப்பதில் சிறு தவறுகள் நேர்ந்திருக்கலாம். அவற்றை பின்னோக்கிப் பார்க்கும்போது தவறாகத் தோன்றலாம். ஆனால், அந்தச் சம்பவங்கள் நடந்தபோது அத்தகைய பின்னோக்கு பார்வை அவர்களிடம் இருந்திருக்காது என்பதை சமூகம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, மருத்துவர் சமூகம், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பரஸ்பர மரியாதையும் புரிதலும் மிகவும் அவசியமாகும் என்றார்.
Advertisement
Advertisement
இதன் மூலம், மகிழ்ச்சியான மருத்துவர் சமூகத்தை உருவாக்க நாம் மேலும் பல நடவடிக்கைகளை எடுப்போம் என்று நம்புகிறோம்; மகிழ்ச்சியான மருத்துவர்களால் இன்னும் அதிக அனுதாபத்துடனும் மனிதநேயத்துடனும் கூடிய மருத்துவ சேவையை வழங்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இளம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களிடையே குறைந்து வரும் பொருமையும், அதிகரித்து வரும் மன அழுத்தம் மற்றும் பொறுமையின்மை குறித்துப் பேசிய அவர், மருத்துவம் என்பது ஒரு வெறும் தொழில் மட்டுமல்ல, அது ஒரு 'அழைப்பு' போன்றது என்றும்; அதற்கு மிகுந்த பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் அனுதாபம் தேவை என்று குறிப்பிட்டார்.
மருத்துவம் என்பது வெறும் தொழிலோ, வருமானம் ஈட்டுவதற்கான வழியோ அல்ல, அல்லது வெறும் வேலைவாய்ப்பும் அல்ல. இதுவே தனது வாழ்வின் அழைப்பு என்று உணர்ந்தால் மட்டுமே ஒருவர் மருத்துவராக வேண்டும். மருத்துவராவதற்கான பயணத்திலும், தொடர்ந்து மருத்துவராக நீடிப்பதிலும் இது மிக முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். இதற்கு மிகுந்த பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் அனுதாபம் தேவை என்று நிகில் மேலும் கூறினார்.
மருத்துவத் துறையில் இருக்கும் ஒருவருக்கு அறிவுத்திறன் மட்டும் போதாது என்றும், மனிதநேய அணுகுமுறையும் அனுதாபமும் மிக முக்கியம் என்று கூறினார்.
மேலும், நீங்கள் மிகச் சிறந்த அறிவுத்திறன் கொண்டவராக இருக்கலாம், ஆனால் மனிதநேய அணுகுமுறையும் அனுதாபமும் மிகவும் முக்கியமானவை. இதற்கு அளப்பரிய கடின உழைப்பும், விடாமுயற்சியும், தளராத மன உறுதியும் தேவை; அதைச் செய்வதற்கு ஒருவர் மனதளவிலும் உடலளவிலும் தயாராக இருக்க வேண்டும். அதேவேளையில், சமூகமும் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
Director, AIIMS, Delhi, Dr Nikhil Tandon stressed that the community has to understand that doctors are also human and they deserve support from the community of doctors, patients and individuals.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.