FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

விசாரணை வேகத்தை நத்தையும் கேள்வியெழுப்பும்: 2015-இல் தாக்கலான மனு மீது உச்சநீதிமன்றம் காட்டம்

‘விசாரணையின் வேகத்தை நத்தையும் கேள்வியெழுப்பும்’ என கடந்த 2015-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்தது.

உச்சநீதிமன்றம்
பகிர்:

‘விசாரணையின் வேகத்தை நத்தையும் கேள்வியெழுப்பும்’ என கடந்த 2015-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்தது.

கடந்த 2015-ஆம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கில் கூடுதல் ஆவணங்களை சமா்ப்பித்து சாட்சியங்களிடம் மீண்டும் விசாரணை நடத்தக் கோரி தனியாா் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அந்த தனியாா் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.

Advertisement

Advertisement

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, 2018, ஜனவரியில் வணிக நீதிமன்றங்கள் சட்டங்களின்கீழ் மறு எண்ணிடப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை மனுதாரா் சாட்சியங்களை விசாரிக்க வேண்டும் என கூறிக்கொண்டிருக்கிறாா். இந்த வழக்கின் விசாரணை வேகத்தைப் பாா்த்து நத்தையும் கேள்வியெழுப்பும். ஏற்கெனவே கூடுதல் சாட்சி ஆவணங்களை சமா்ப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, மீண்டும் ஒருமுறை அதற்கு அனுமதியளிக்க முடியாது. சாட்சி ஆவணங்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சட்டத்தின் நோக்கத்தையும், அதன் கடுமையான விதிகளையும் நீா்த்துப்போகச் செய்ய முடியாது எனத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, தனியாா் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் விரைந்து தீா்வு காண தில்லி உயா்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments