தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!
நாடு முழுவதும் கனமழைக்கு 60-க்கும் மேற்பட்டோர் பலியானது பற்றி...
வட மாநிலங்கள், கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளுக்கு இன்று மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரம், குஜராத், கேரளம், தில்லி மற்று ஜம்மு - காஷ்மீரில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
Advertisement
Advertisement
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கவும், அவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கவும் மீட்புப் படையினர் இரவுபகலாகப் பணியாற்றி வருகின்றனர்.
நாடு முழுவதும் வெள்ளம், நிலச்சரிவு, கட்டட இடிபாடுகள் போன்ற பேரிடர்களில் சிக்கி இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பலியாகியுள்ளனர். கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, தில்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மேலும், தில்லி மற்றும் என்சிஆர் பகுதிக்கு அடுத்த 24 மணிநேரத்துக்கு மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
Red alert for Delhi! 60 dead due to rains across the country!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.