சொல்வதெல்லாம் பொய்! 100% இயற்கையான உணவு என்றால்..எஃப்எஸ்எஸ்ஏஐ கொடுக்கும் அதிர்ச்சி
100% இயற்கையான உணவுப் பொருள் என்றால் உண்மை என்ன என்று எஃப்எஸ்எஸ்ஏஐ விளக்கம்
100 சதவிகிதம் இயற்கையான பன் என்று விளம்பரம் செய்தால், அதில் பிரசர்வேடிவ் இருக்கலாம், ப்ரீமியம் சாக்லேட் என்றால் அதிலும் கோகோ வெண்ணெய்க்கு பதிலாக காய்கறி கொழுப்பு இருக்கலாம், பழங்களின் ப்ளேவரில் வரும் சாக்லேட்களில் எந்த பழங்களும் சேர்க்கப்படாமலும் இருக்கலாம் என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுக் கழகமானது, பல்வேறு உணவுப் பொருள்களிலும் இருக்கும் லேபிள்கள், நுகர்வோரை தவறாக வழிகாட்டுவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறது.
உள்பொருள்கள் மற்றும் சத்துகள் குறித்த லேபிள்களில் இருக்கும் முரண்பாடுகளுக்காக பல்வேறு உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
Advertisement
Advertisement
ஒரு பொருளை வாங்கும்போது, அதன் லேபிள்களைப் பார்த்துதான் நுகர்வோர் வாங்குகிறார்கள். எனவே, உணவுப் பொருள் பற்றிய உண்மையான தெளிவான விவரங்கள் அளிக்கப்பட வேண்டும். உணவுப் பொருள் பாக்கெட்டின் பின்பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும் உள்பொருள்களின் பட்டியல், சத்துகளின் விவரங்களை கவனமாகப் படித்துப் பார்த்து உணவுப் பொருளைத் தெரிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
குபேரா ஃபூட்ஸ் நிறுவனம், தன்னுடைய பன் வகைகளை விளம்பரப்படுத்தும்போது, 100% இயற்கையானது, ப்ரசர்வேட்டிவ், நிறமிகள், மணமூட்டிகள் எதுவும் இல்லை என்று கூறினாலும், அதன் லேபிளில் ப்ரசர்வேட்டிவ், சிந்தெடிக் நிறம், மணமூட்டிகள் கலந்திருப்பதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் உணவுப் பொருள்களில் சுத்தமான (ப்யூர்), புதிய (ஃப்ரெஷ்), இயற்கையான (நேச்சுரல்) போன்ற வார்த்தைகளை பெயர்களில் இணைப்பதற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு கழகம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
லாட்டி இந்தியா நிறுவனம் பல்வேறு பொருள்களின் பெயர்களுக்கு நோட்டீஸ் பெற்றுள்ளது. அதில், 100 சதவிகிதம் சைவம் என்ற விளம்பரம், பெப்பர்கோ பிஸ்கட் ஸ்டிக்குகளில் சத்துக்களின் பட்டியல் இல்லாதது, பழங்களின் சுவையில் ஃப்ரூட்ஸ் எக்லையர்ஸில் பழங்களே சேர்க்கப்படாதது, பழைய முன்கூட்டியே பிரிண்ட் செய்த லேபிள்களை தற்போதும் பயன்படுத்துவது, குறித்தும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது எஃப்எஸ்எஸ்ஏஐ.
What exactly does 100% natural food product mean?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.