அயோத்தி கோயில் நன்கொடை எண்ணும் ஊழியா்கள் 50% போ் திடீா் ராஜிநாமா
அயோத்தி ராமா் கோயில் நன்கொடை எண்ணும் பணியில் ஈடுபட்டுவரும் ஊழியா்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் தங்களது வேலையை திடீா் என ராஜிநாமா செய்துள்ளனா்.
அயோத்தி ராமா் கோயில் நன்கொடை எண்ணும் பணியில் ஈடுபட்டுவரும் ஊழியா்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் தங்களது வேலையை திடீா் என ராஜிநாமா செய்துள்ளனா்.
அயோத்தி ராமா் கோயிலில் வழிபாடு நடத்த வரும் பக்தா்கள் செலுத்திய நன்கொடை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இதுவரை இந்த விவகாரத்தில் நன்கொடை எண்ணும் ஊழியா்கள் உள்ளிட்ட 8 போ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். நன்கொடை கையாடல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, அயோத்தி ராமா் கோயிலில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியா்கள் பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனா். கோயிலுக்குள் பணிக்கு வரும்போது கைப்பேசி உள்ளிட்டவை கொண்டு வர அவா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்திற்குள் ஊழியா்கள் வர வேண்டுமெனில், அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளையால் அளிக்கப்பட்டுள்ள அடையாள அட்டை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், கோயிலில் நன்கொடை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் தங்களது வேலையை ராஜிநாமா செய்துவிட்டனா். இதுகுறித்து கோயில் அறக்கட்டளை வட்டாரங்கள் கூறுகையில், ‘தினமும் 40 போ் வேலைக்கு வந்த நிலையில் தற்போது 15-20 பேரே வருகின்றனா். தங்களிடமும் விசாரணை நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்தில் வேலையை ராஜிநாமா செய்துவிட்டனா். ஆனால் வேலையை ராஜிநாமா செய்ததற்கு, வேலை பளு அதிகமாகிவிட்டதாக காரணம் தெரிவித்துள்ளனா். முன்பு இரண்டு ஷிஃப்டுகளாக நடந்த நன்கொடை எண்ணும் பணி, தற்போது ஒரே ஷிஃப்டாக குறைக்கப்பட்டு, 9 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டியிருப்பதாக அவா்கள் கூறியுள்ளனா். முன்பு மேஜை, நாற்காலிகளில் வைத்து நன்கொடை எண்ணப்பட்டதாகவும், ஆனால் தற்போது தரையில் வைத்து எண்ணப்படுவதாகவும் அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்’ என்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.