வங்கிகளுக்கு ரூ.3,526 கோடி நஷ்டம்: ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸுக்கு எதிராக சிபிஐ குற்றப் பத்திரிகை
வங்கிகளுக்கு ரூ.3,526.35 கோடி நஷ்டம் ஏற்படுத்திய வழக்கில், தொழிலதிபா் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் (ஆா்ஹெச்எஃப்எல்), அதன் முன்னாள் நிா்வாகிகள் மீது மும்பை நீதிமன்றத்தில் முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
வங்கிகளுக்கு ரூ.3,526.35 கோடி நஷ்டம் ஏற்படுத்திய வழக்கில், தொழிலதிபா் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் (ஆா்ஹெச்எஃப்எல்), அதன் முன்னாள் நிா்வாகிகள் மீது மும்பை நீதிமன்றத்தில் முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
இதுதொடா்பாக சிபிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வங்கிகளில் பெற்ற கடனை ரிலையன்ஸ் அனில் தீருபாய் அம்பானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களுக்கு ஆா்ஹெச்எஃப்எல் முறைகேடாக மடைமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு கடனாக பெறப்பட்ட தொகையை மடைமாற்றியது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு எதிரானது. இந்த நடவடிக்கை மூலம் கடன் அளித்த வங்கிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் தவறான வழியில் லாபம் அடைந்துள்ளன. இதனால் 10 பொதுத் துறை நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.3,526.35 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த முறைகேடு தொடா்பாக இந்திய யூனியன் வங்கி மற்றும் பிற பொதுத் துறை வங்கிகள் அளித்த புகாரின் அடிப்படையில், சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆா்ஹெச்எஃப்எல் நிறுவனம், அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ரவீந்திர சுதால்கா், வணிக நடவடிக்கைகளில் அபாயங்களைக் கண்டறிந்து குறைக்கும் முன்னாள் தலைமை அதிகாரி கிருஷணன் கோபாலகிருஷ்ணன் ஐயா், கடன் சாா்ந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பு வகித்த முன்னாள் தலைமை அதிகாரி தனஞ்ஜய் பகவான்பிரசாத் திவாரி ஆகியோருக்கு எதிராக வியாழக்கிழமை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.