FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இன்னும் ரூ.2000 நோட்டு வைத்திருக்கிறீர்களா? என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

இன்னும் ரூ.2000 நோட்டு கையில் வைத்திருந்தால் அதனை பணமாக மாற்றிக் கொள்ளும் வழிகள்..

ரூ.2000 நோட்டு - from X
பகிர்:

நாட்டில், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.2000 நோட்டை யாராவது வைத்திருந்தால், அச்சப்பட வேண்டாம், அதனை இப்போதும் செல்லுபடியாகும் பணமாக மாற்றிக் கொள்ளலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

ரூ.2000 நோட்டு வீட்டில் இருந்தால், அதனை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம், அல்லது செல்லும் பணமாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டில் 19 பணமாற்றும் அலுவலகங்களில் நேரில் வந்து 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்து சில்லறை பெற்றுக் கொள்ளலாம். அல்லது இந்திய அஞ்சல்துறை மூலம் மாற்றிக் கள்ளும் வழிகள் இருப்பதை ஆர்பிஐ உறுதி செய்திருக்கிறது.

Advertisement

Advertisement

ஜூலை 9ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், நாட்டில் புழக்கத்தில் விடப்பட்ட பெரும்பாலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. எனினும் சில நோட்டுகள் மக்களிடம் உள்ளன.

ரூ.2000 நோட்டுகள் இன்னமும் செல்லுபடியாகும்.

நாட்டில் உள்ள 19 ஆர்பிஐயின் அலுவலகங்களில் நேரில் வந்து பணத்தைக் கொடுத்து சில்லறை பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது, இந்த ஆர்பிஐ அலுவலகங்களுக்கு அஞ்சல் மூலம் பணத்தை அனுப்பி அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்ப்பட்டபோது ரூ.2000 நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. பிறகு, 2023ஆம் ஆண்டு மே மாதம் இந்த நோட்டும் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அது முதல் பல்வேறு வழிகளில் 2000 ரூபாய் நோட்டை ஆர்பிஐ திரும்பப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments