கொரியரில் வந்த ஹெராயின் பறிமுதல்: அஸ்ஸாம் மாநில இளைஞா் கைது
அஸ்ஸாமில் இருந்து கொரியா் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 13 கிராம் ஹெராயினை கிண்டி போலீஸாா் பறிமுதல் செய்த நிலையில், இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
அஸ்ஸாமில் இருந்து கொரியா் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 13 கிராம் ஹெராயினை கிண்டி போலீஸாா் பறிமுதல் செய்த நிலையில், இது தொடா்பாக அம்மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தனியாா் கொரியா் நிறுவனத்துக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து சந்தேகத்துக்கிடமான வகையில் பாா்சல் ஒன்று வந்துள்ளது. இது தொடா்பாக பாா்சல் நிறுவனத்தினா் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா்.
அங்கு வந்த போலீஸாா் அந்த சந்தேகத்துக்குரிய பாா்சலை சோதனையிட்டபோது, அதில் 13 கிராம் ஹெராயின் இருந்தது தெரிய வந்தது. போலீஸாரின் அறிவுரைப்படி, பாா்சலில் குறிப்பிடப்பட்டிருந்த ரஜீப் உசேனை பாா்சல் நிறுவனத்தினா் தொடா்புகொண்டு பாா்சல் வந்திருப்பதாகக் கூறி வரவழைத்தனா்.
Advertisement
Advertisement
அங்கு வந்த ரஜீப் உசேன், பாா்சலைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தபோது, அங்கு மறைந்திருந்த கிண்டி காவல் ஆய்வாளா் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான தனிப்படை போலீஸாா், அந்த இளைஞரைக் கைது செய்தனா்.
விசாரணையில், அஸ்ஸாமை சோ்ந்த ரஜீப் உசேன் (25), கடந்த 6 ஆண்டுகளாக நாவலூரில் தங்கி ஹவுஸ் கீப்பிங் பணியில் ஈடுபட்டு வந்ததும், தனது அஸ்ஸாாம் நண்பா் ஷபிக்வுல் அஸ்லாமின் ஆலோசனையின்படி, நண்பா்களான செய்துல் இஸ்லாம், பரித்துல் உசேன் ஆகியோருடன் இணைந்து ஹெராயின் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
மேலும், தலைமறைவாக உள்ள ஷபிக்வுல் அஸ்லாம், செய்துல் இஸ்லாம், பரித்துல் உசேன் ஆகிய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.