பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியர்கள் அடையும் பலன்!
இந்தியா - பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் அடையும் பலன் குறித்து ...
இந்தியா - பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் அடையும் பலன் குறித்து மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மும்பையில் இது தொடர்பாக பியூஷ் கோயல் பேசியதாவது:
Advertisement
Advertisement
''இன்னும் இரண்டு நாள்களே உள்ளன. ஜூலை 15-ஆம் தேதியிலிருந்து, இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு (UK) ஏற்றுமதி செய்யப்படும் எந்தவொரு பொருளுக்கும் இறக்குமதி வரி கிடையாது.
இந்த பிரிட்டன் - இந்தியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நம் அனைவருக்கும் புதிய வாய்ப்புகளையும் மகத்தான சாத்தியக்கூறுகளையும் கொண்டு வருகிறது.
அங்கு பணிபுரியச் செல்லும் நமது இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பெரும்பாலும் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு, சில சமயங்களில் நிறுவனங்களுக்கு இடையிலான பணியிட மாற்றங்கள் மூலம் அங்கு செல்கிறார்கள்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு முன்பு, அவர்களின் ஊதியத்தில் சுமார் 25% உள்ளூர் அரசாங்கம் எடுத்துக்கொண்டது. அதனால் தொழிலாளிக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
இப்போது, நாங்கள் 'இரட்டைப் பங்களிப்பு ஒப்பந்தம்' (double contribution convention agreement) ஒன்றை இறுதி செய்துள்ளோம். இதுவும் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன் கீழ், சேவைத் துறையிலோ அல்லது பிற பணிகளிலோ ஐந்து ஆண்டுகள் வரை அங்கு பணிபுரியச் செல்லும் இந்தியர்களின் சம்பளத்தில் முன்பு உள்ளூர் அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்ட அந்த 25% தொகை, இனி இந்தியாவில் உள்ள அவர்களின் வருங்கால வைப்பு நிதி (Provident Fund) கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
அந்தப் பணம் அவர்களுக்கே சொந்தமானது; அதற்கு 8.25% வரி இல்லாத வட்டி கிடைக்கும், மேலும் அது அவர்களின் முதுமைக்காலத்திற்கு ஒரு ஆதரவாகவும், குடும்பங்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அமையும்.
பிரிட்டன் - இந்தியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமானது சரக்குகள் மற்றும் பொருள்களைக் கையாள்வதுடன் மட்டுமின்றி, அங்கு பணிபுரிந்து சேவையாற்றும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பலனையும் அளிக்கிறது. இது பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமைக்கு ஒரு சான்று'' எனக் குறிப்பிட்டார்.
Union Minister Piyush Goyal says benefits of India-UK FTA agreement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.