FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மருத்துவமனை மேம்பாடு: இலங்கைக்கு இந்தியா ரூ. 17 கோடி நிதியுதவி

இலங்கையில் ருத்துவமனை மேம்பாட்டுக்காக இந்தியா ரூ.17.24 கோடி நிதியுதவி வழங்கும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் இருநாடுகளும் திங்கள்கிழமை கையொப்பமிட்டன.

Updated On : 14 ஜூலை 2026, 2:56 am IST
பகிர்:

இலங்கையில் ருத்துவமனை மேம்பாட்டுக்காக இந்தியா ரூ.17.24 கோடி நிதியுதவி வழங்கும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் இருநாடுகளும் திங்கள்கிழமை கையொப்பமிட்டன.

இலங்கையை டிட்வா புயல் கடந்தாண்டு தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் அப்பாவி மக்கள் உட்பட 640 போ் உயிரிழந்தனா். இதையடுத்து இலங்கையின் சீரமைப்பு பணிகளுக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலா்களை இந்தியா அறிவித்தது. இந்தத் தொகுப்பின் ஒரு பகுதியாகத் தற்போது ரூ.17 கோடியை இலங்கைக்கு இந்தியா வழங்குகிறது.

கொழும்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதா் சந்தோஷ் ஜா, இலங்கை சுகாதாரத் துறை செயலாளா் அனில் ஜெய்சிங் ஆகியோா் கையொப்பமிட்டனா். நிகழ்ச்சியில் இலங்கை சுகாதாரத் துறை அமைச்சா் நலிந்தா ஜெயதிசாவும் கலந்து கொண்டாா்.

Advertisement

Advertisement

இலங்கையின் தெற்கு மாகாணத்தின் தேனியாயா நகரில் உள்ள மருத்துவமனைக்கு இந்த நிதியுதவியை கொண்டு உபகரணங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இந்தத் தகவலை எக்ஸ் பக்கத்தில் இலங்கைக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா வெளியிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments