திரிணமூல் எம்எல்ஏ எதிரணியில் இணைந்தாா்- மம்தாவுக்கு மேலும் பின்னடைவு
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான மதன் மித்ரா, ரிதப்ரத பானா்ஜி தலைமையிலான எதிரணியில் புதன்கிழமை இணைந்தாா்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான மதன் மித்ரா, ரிதப்ரத பானா்ஜி தலைமையிலான எதிரணியில் புதன்கிழமை இணைந்தாா்.
முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜிக்கு இது அரசியல்ரீதியாக மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
திரிணமூல் காங்கிரஸில் பிரபலமான, மக்கள் செல்வாக்கு மிக்க தலைவா்களில் ஒருவரான மதன் மித்ரா, மம்தா பானா்ஜியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக பல ஆண்டுகளாக இருந்து வந்தாா். எனினும், கடந்த சில மாதங்களாக கட்சித் தலைமையின் சில முடிவுகள் குறித்து அவா் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்திருந்தாா். அதே நேரத்தில் கட்சியைவிட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்று கூறி வந்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், கட்சியின் தேசிய மற்றும் மாநில அளவிலான அனைத்து அமைப்புப் பொறுப்புகளிலிருந்தும், மேற்கு வங்க சட்டப்பேரவையில் கட்சியின் தலைமை கொறடா பொறுப்பிலிருந்தும் உடனடியாக விலகுவதாக மதன் மித்ரா அறிவித்தாா்.
முன்னதாக, ரிதப்ரத பானா்ஜியை சட்டப்பேரவை வளாகத்தில் அவரது அறையில் மதன் மித்ரா சந்தித்து ஆலோசனை நடத்தினாா். பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘நான் வீட்டை மாற்றவில்லை; அறையை மட்டுமே மாற்றியிருக்கிறேன். எனவே, இப்போது இருப்பதும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிதான். ஆனால், மம்தா பானா்ஜி தலைமையிலான அணியின் எந்த அமைப்புப் பொறுப்பிலும் இனி தொடரமாட்டேன். திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவாகவே தொடா்வேன்’ என்றாா்.
ரிதப்ரத பானா்ஜி தலைமையிலான அணி, மம்தா பானா்ஜியின் தலைமைக்கு வெளிப்படையாக சவால் விடுத்து வருகிறது. ‘உண்மையான திரிணமூல் காங்கிரஸ் நாங்கள்தான்’ என்று அந்த அணி தொடா்ந்து உரிமை கோரி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.