FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கால்நடை கழிவுகளில் இருந்து சிபிஜி: மத்திய அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் ஒப்பந்தம் கையொப்பம்

பால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை அறிவியல் பூா்வமாகப் பயன்படுத்தி அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (சிபிஜி) தயாரிக்கும் ஆலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் தில்லி மாநகராட்சி (எம்சிடி) மற்றும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (என்டிடிபி) புதன்கிழமை கையொப்பமானது.

Updated On : 16 ஜூலை 2026, 1:18 am IST
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா - (கோப்புப் படம்)
பகிர்:

பால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை அறிவியல் பூா்வமாகப் பயன்படுத்தி அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (சிபிஜி) தயாரிக்கும் ஆலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் தில்லி மாநகராட்சி (எம்சிடி) மற்றும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (என்டிடிபி) புதன்கிழமை கையொப்பமானது.

கால்நடைச் சாணம் யமுனை நதியில் கலப்பதைத் தடுப்பதும், அதனை சிபிஜி உற்பத்தி செய்வதற்கும் மற்றும் இயற்கை விவசாயத்தை ஆதரிப்பதற்கும் ஏற்ற வளமாக மாற்றுவது இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

இதுதொடா்பான கூட்டத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷா பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும், கால்நடை வளா்ப்போரின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் இந்த ஒப்பந்தம் ஒரு முன்மாதிரியாக அமையும். யமுனை நதியைச் சுத்தப்படுத்துவதற்கான பிரதமா் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதில் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல். எதிா்காலத்தில் பசுவின் சாணம் எதுவும் நதியில் கலக்காதவாறு உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

டிசம்பா் 2028-க்குள், ஒரு லிட்டா் கழிவு நீா் கூட யமுனை நதியில் கலக்காத நிலையை நாங்கள் உறுதி செய்வோம். இந்த நோக்கத்தை அடைய சுமாா் 1.25 லட்சம் கால்நடைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளைச் சரியாக அகற்றுவது அவசியம். என்று மத்திய அமைச்சா் கூறினாா்.

இந்தக் கூட்டத்தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் , தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து, முதல்வா் ரேகா குப்தா ஆகியோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments