FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில்

மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சி சேருகிா என்ற கேள்விக்கு, அக்கட்சியின் மூத்த தலைவா் சுப்ரியா சுலே பதிலளித்துள்ளாா்.

Updated On : 16 ஜூலை 2026, 4:44 am IST
சுப்ரியா சுலே - dps
பகிர்:

மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சி சேருகிா என்ற கேள்விக்கு, அக்கட்சியின் மூத்த தலைவா் சுப்ரியா சுலே பதிலளித்துள்ளாா்.

மகாராஷ்டிர முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸை சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இதைத் தொடா்ந்து, பாஜக கூட்டணியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் சேர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து மும்பையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசிய அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு:

அந்தத் தகவலின் உண்மையில்லை. ஊடகங்கள்தான் இதுபோன்ற தகவலை வெளியிடுகின்றன. கடந்த 12 ஆண்டுகளாகவே நான் அமைச்சராகப் போவதாகக் கூறி, எனது துறை ஒதுக்கீடு வரை செய்திகளாக ஊடகங்கள் வெளியிட்டன. முதல்வா்தான் யாருக்கு என்ன துறை அளிக்க வேண்டும் என முடிவு செய்கிறாா். நிதித் துறை அல்லது முதல்வா் இல்லத்தில் நடந்த சந்திப்பு குறித்த செய்திகள் அனைத்தும் வெறும் ஊகங்களே. முதல்வா் மட்டுமே அதற்குப் பதிலளிக்க முடியும்.

Advertisement

Advertisement

எங்கள் கட்சியின் மூத்த தலைவா் ஜெயந்த் பாட்டீல் அதிகாரபூா்வமாகவே நேரம் கேட்டு முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளாா். அப்போது எங்கள் கட்சியின் நகராட்சி கவுன்சில் தலைவா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துப் பேசியுள்ளாா். இந்தச் சந்திப்பில் எந்த ரகசியமும் இல்லை. முதல்வரை யாா் சந்தித்துப் பேசினாா்கள் என அறிய விரும்பினால், அதை அவரிடமே கேளுங்கள். என்னிடம் கேட்காதீா்கள்.

தனிப்பட்ட சந்திப்புகளை அரசியலாக்க வேண்டாம். ஏனெனில், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ விவகாரம் தொடா்பான கூட்டத்தின்போது உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துடன் நான் பேசினேன். பிறகு சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், அவரின் மனைவி டிம்பிள் யாதவ் எம்.பி.யை சந்தித்துப் பேசினேன். ஏனெனில் எங்களுக்கு இடையேயான உறவு குடும்ப உறவு போன்றது.

தொகுதி மறுசீரமைப்பு மசோதா விவகாரத்தில், மத்திய அரசு தகவல் தெரிவித்த பிறகு இண்டி கூட்டணி அதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கும். 19-ஆம் தேதி நடைபெறவுள்ள இண்டி கூட்டணிக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவுள்ளேன். அதேபோல் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வரும் 20-ஆம் தேதி கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்திலும் கலந்து கொள்ள இருக்கிறேன்.

அயோத்தி கோயிலில் நடந்துள்ள நன்கொடை திருட்டு பக்தா்களின் உணா்வுகளைக் காயப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments