சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரயில்! ஜூலை 17 சேவை தொடங்குகிறது! எங்கே?
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் தொடக்கவிழா பற்றி...
சென்னை, பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடக்கிவைக்கவுள்ளார்.
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் தலா 10 பெட்டிகளைக் கொண்ட 35 ஹைட்ரஜன் ரயில்களை தயாரிக்க மத்திய அரசு சார்பில் ரூ. 2,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
கார்பனை உமிழ்வதுக்கு பதிலாக தண்ணீரை மட்டுமே வெளியிடும், ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் ரயில்கள், உலகளவில் ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் மட்டுமே உள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ஐசிஎஃப்) நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலம் மூலம் இயங்கும் 10 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் ஹரியாணா மாநிலத்தின் ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.
1200 கிலோவாட் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல உந்துவிசை அமைப்பின் மூலம் இயக்கப்பட்டு, மணிக்கு அதிகபட்சமாக 75 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலின் சேவையை வருகின்ற ஜூலை 17 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைக்கவுள்ளார்.
The first hydrogen train manufactured in Chennai! Service begins on July 17! Where?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.