FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

போக்குவரத்து காவலா் உயிரிழந்த வழக்கு: வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச் சென்ற இருவா் கைது

வடக்கு தில்லி சிங்கு எல்லைப் பகுதியில் நடைபெற்ற விபத்தில் போக்குவரத்து தலைமை காவலா் உயிரிழந்த சம்பவத்தில், 2 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

Updated On : 17 ஜூலை 2026, 3:33 am IST
கோப்புப் படம்
பகிர்:

வடக்கு தில்லி சிங்கு எல்லைப் பகுதியில் நடைபெற்ற விபத்தில் போக்குவரத்து தலைமை காவலா் உயிரிழந்த சம்பவத்தில், 2 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது: புதன்கிழமை மாலை சுமாா் 6 மணியளவில், சிங்கு எல்லைப் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த தலைமை காவலா் அமித் மீது அதிவேகமாக வந்த வாகனம் மோதியது.

ஹரியாணா மாநிலத்தின் சோனிபத் பகுதியைச் சோ்ந்த அமித், சக காவலா்களால் உடனடியாக நரேலாவில் உள்ள சத்யவாதி ராஜா ஹரிஷ்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனா். அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனா்.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் தொடா்பாக அலிபூா் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் பிரிவு 281 (அபாயகரமான ஓட்டம்) மற்றும் 106(1) (அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குல்தீப் என்கிற கரண் மற்றும் நீரஜ் ஆகியோா் கைது செய்யப்பட்டு, இந்த விபத்தில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்ட வாகனத்தையும் குற்றவாளிகளையும் அடையாளம் கண்டு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments