சோனம் வாங்சுக்கின் போராட்டத்துக்கு சமாஜ்வாதி எம்பிக்கள் ஆதரவு!
சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு டிம்பிள் யாதவ் உள்ளிட்ட சமாஜ்வாதி எம்பிக்கள் ஆதரவு...
சோனம் வாங்சுக் மற்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினரின் போராட்டத்திற்கு சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி மற்றும் லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆகியோர் இணைந்து கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி தில்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், கடந்த ஜூன் 28 முதல் சுமார் 19 நாள்களாக சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் கடைபிடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்வின் மனைவியும், மக்களவை உறுப்பினருமான டிம்பிள் யாதவ் உள்ளிட்ட சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜந்தர் மந்தரில் நடைபெறும் சோனம் வாங்சுக் மற்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினரின் போராட்டத்திற்கு இன்று (ஜூலை 16) நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்குத் தேவையான உதவிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Samajwadi MPs have extended their support to the protest led by Sonam Wangchuk and the CJP.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.