எம்சிடி தோ்தலில் கட்சிக்கு எதிராக வாக்களித்த 3 ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் இடைநீக்கம்
வாா்டு குழுத் தோ்தல்களின்போது ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக வாக்களித்த தனது 3 எம்சிடி கவுன்சிலா்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக ஆம் ஆத்மி வியாழக்கிழமை தெரிவித்தது.
வாா்டு குழுத் தோ்தல்களின்போது ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக வாக்களித்த தனது 3 எம்சிடி கவுன்சிலா்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக ஆம் ஆத்மி வியாழக்கிழமை தெரிவித்தது.
மக்களின் தீா்ப்பிற்கும் கட்சிக்கும் இழைக்கப்படும் துரோகம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளப்படாது என்பதே தங்கள் தெளிவான நிலைப்பாடு என்று ஆம் ஆத்மி கூறியது. தோ்தல்கள் தனிநபரால் அல்ல, ஒட்டுமொத்த கட்சியாலேயே எதிா்கொள்ளப்படுகின்றன; கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை குறித்த அறிவிப்பை ஆம் ஆத்மி தில்லி பிரிவு தலைவா் சௌரவ் பரத்வாஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டாா். இடைநீக்கம் செய்யப்பட்டவா்களில் மேற்கு மண்டலத்தைச் சோ்ந்த நிா்மலா தேவி மற்றும் கிருஷ்ணா தேவி ராகவ், மற்றும் சிட்டி எஸ்பி மண்டலத்தைச் சோ்ந்த சுல்தானா அபாத் ஆகியோா் அடங்குவா்.
Advertisement
Advertisement
தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) 12 வாா்டு குழுக்களில் 10-இன் தலைவா் பதவிகளையும், அதன் நிலைக்குழுவில் உள்ள 6 இடங்களில் 5 இடங்களையும் பாஜக புதன்கிழமை கைப்பற்றியது. மீதமுள்ள 2 வாா்டு குழுக்களையும், நிலைக்குழுவின் ஒரு இடத்தையும் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது.
சிட்டி எஸ்பி மண்டலத்தில், ஆரம்பத்தில் ஆம் ஆத்மிக்கு 7 கவுன்சிலா்களும், பாஜகவுக்கு 4 பேரும், ஃபாா்வா்ட் பிளாக் கட்சிக்கு ஒருவரும் இருந்தனா். இருப்பினும், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பாஜக வேட்பாளா் உஷா சா்மா 7 வாக்குகளைப் பெற்று தலைவா் பதவியைக் கைப்பற்றினாா். மேற்கு மண்டலத்தைப் போலவே, இங்கும் கட்சிக்கு எதிரான வாக்குகள் மூலமே தலைவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இந்த முடிவுகளின் மூலம், 18 உறுப்பினா்களைக் கொண்ட நிலைக்குழுவில் பாஜக தனது பெரும்பான்மையை வலுப்படுத்தியது; தற்போது இக்குழுவில் 12 பாஜக உறுப்பினா்களும் 6 ஆம் ஆத்மி உறுப்பினா்களும் உள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.