வினாத்தாள் கசிவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்: மாணவர்களை அழைக்கும் ராகுல்!
வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் பற்றி..
உத்தரகண்ட் மாநிலம் வினாத்தாள் கசிவுகளின் மையமாக மாறியுள்ளதாகவும், ஜூலை 17ல் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில்,
தேவபூமி என்ற அழைக்கப்படும் உத்தரகண்ட் மாநிலம் வினாத்தாள் கசிவுகளின் மையமாக மாறியுள்ளது. இளைஞர்களின் எதிர்காலம் ஏலத்தில் விடப்பட அனுமதிக்கமாட்டோம்.
Advertisement
Advertisement
யுகேஎஸ்எஸ்எஸ்சி (உத்தரகண்ட் துணைப் பணித் தேர்வுக் குழுமம்) தேர்வுகள் தொடர்பாக ஒரு அமைப்பு வேரூன்றியுள்ளது. பட்வாரி அல்லது லேக்பால் போன்ற பதவிகள் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை, அந்தப் பதவிகள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே விற்கப்படுகின்றன.
அரசு முறைகேடு தடுப்புச் சட்டத்தை இயற்றிய போதிலும், வினாத்தாள் கசிவுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த சட்டங்கள் வெறும் காகித அளவில் மட்டுமே உள்ளது. வினாத்தாள்கள் சந்தையில் தொடர்ந்து விற்கப்பட்டு வருகின்றன.
மாணவர் ஒருவர் பல ஆண்டுகளாகத் தேர்வுக்குத் தயாராகி, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தி, தொலைவில் உள்ள தேர்வு மையத்திற்குப் பயணம் செய்து தேர்வுகளை எழுதுகிறார். ஆனால், அந்த மாணவருக்கு போய் சேரவேண்டிய பணி வேறொருவரால் விலைக்கு வாங்கப்படுகிறது.
இது வெறும் வினாத்தாள் கசிவு மட்டுமல்ல, இது ஒரு திருட்டு. இளைஞரின் உரிமைகள், வாழ்வாதாரம், எதிர்காலம் ஆகியவற்றின் திருட்டு.
உத்தரகண்ட்டில் உள்ள ஒவ்வொரு மாணவர், இளைஞர்களிடமும் நான் சொல்கிறேன். இது உங்களுக்கான போராட்டம். நான் உங்களுடன் நிற்கிறேன்.
ஜூலை 17 டேராடூன் வாருங்கள், மாணவர்களின் குரலை சக்திவாய்ந்த முழக்கமாக மாற்றுவோம். மாணவர்களின் எதிர்காலம் ஏலத்தில் விட நாங்கள் அனுமதிக்கமாட்டோம். கனவுகள் கசிந்து வீணாக விடமாட்டோம் என்று அவர் கூறினார்.
A day before his interaction with students in Dehradun, Congress leader Rahul Gandhi on Thursday said Uttarakhand has turned into an epicentre of paper leaks and asserted that he will not let the future of youth be auctioned off.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.