முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெ கௌடாவின் மனைவி சென்னம்மா காலமானார்
முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெ கௌடாவின் மனைவி சென்னம்மா காலமானார்.
முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெ கௌடாவின் மனைவி சென்னம்மா மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் காலமானார்.
அவருக்கு வயது 80 ஆகும். கர்நாடக மாநிலம், பெங்களூருவின் பழைய விமான நிலைய சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சென்னம்மா புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சுவாசப் பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் பலியானதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேவெ கௌடா, அவரது மகனும் மத்திய அமைச்சருமான ஹெச்.டி. குமாரசாமி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் இருந்தனர்.
சென்னம்மா 1954-இல் தேவெ கௌடாவை மணந்தார். இத்தம்பதியருக்கு நான்கு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
Chennamma Deve Gowda, the wife of former Prime Minister H D Deve Gowda, passed away on Saturday after suffering a massive cardiac arrest at a private hospital here.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.