முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சமூக நீதி வணக்கம்! முதல்வர் விஜய்

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்த நாளையொட்டி முதல்வர் விஜய் பதிவு...

Updated On : 25 ஜூன் 2026, 10:25 am IST
முன்னாள் பிரதமர் வி.பி. சிங் | முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் சமூக நீதிக்கான பங்களிப்பு அரசியல் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என முதல்வர் ஜோசப் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்தவர், சமூக நீதிக்காக பாடுபட்டவர் என்பதால் 'சமூக நீதிக் காவலர்' என்று போற்றப்படுகிறார்.

Advertisement

Advertisement

வி.பி. சிங் பிறந்த நாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

முதல்வர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில்,

"எளிமை, நேர்மை மற்றும் கொள்கைப் பற்றுடன் அரசியல் வாழ்வை முன்னெடுத்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது சமூக நீதி வணக்கம்.

சமூக நீதிக்கான அவரது பங்களிப்பும், சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பும் இந்திய அரசியல் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

summary

A salute to social justice in honor of former Prime Minister V.P. Singh: Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments