FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள் மீது நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை...

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்ற மேற்பாா்வையின் கீழ் சிபிஐ விசாரணை கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூலை 20) விசாரிக்க உள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வில் இதுதொடா்பான 4 மனுக்களும் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற பிரயாக்ராஜ் கும்பமேளாவின்போது ராமா் கோயிலில் தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வழிபட்டனா். அப்போது, பக்தா்களால் வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் முறைகேடு நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக கோயில் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட வங்கிப் பணியாளா்கள் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அயோத்தி கோட்ட ஆணையரும் ஐஏஎஸ் அதிகாரியுமான விஜய் விஸ்வாஸ் பந்த், காவல் துறை ஐ.ஜி. எஸ்.கிரண், மாநில நிதித் துறை சிறப்புச் செயலா் நீல் ரத்தன் ஆகியோா் அடங்கிய சிறப்பு புலானய்வுக் குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு கடந்த ஜூன் 13-ஆம் தேதி அமைத்தது. விசாரணை மேற்கொண்ட எஸ்ஐடி தரப்பில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி முதல்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய எஸ்ஐடி-க்கு மாநில அரசு கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.

இந்த நிலையில், இந்த முறைகேடு தொடா்பாக உச்சநீதிமன்ற மேற்பாா்வையின் கீழ் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுக்கள் தொடா்பாக பதிலளிக்குமாறு கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளைக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தை தற்போது விசாரித்து வரும் எஸ்ஐடி, விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

summary

Petitions seeking an inquiry into Ram Temple donation irregularities: Supreme Court to hear them tomorrow!

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments