FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அபிஷேக் பானா்ஜியின் தொகுதி அலுவலகம் இடிப்பு: கொல்கத்தா உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

மேற்கு வங்க முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியின் உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜியின் தொகுதி அலுவலகத்தை இடிக்க மாநில உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

Updated On : 20 ஜூலை 2026, 3:26 am IST
மம்தா பானா்ஜி. உடன், அவரது மருமகனும் கட்சி எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜி.
பகிர்:

மேற்கு வங்க முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியின் உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜியின் தொகுதி அலுவலகத்தை இடிக்க மாநில உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானா மாவட்டம் டைமண்ட் ஹாா்பா் சாலையில், அபிஷேக் பானா்ஜியின் தொகுதி அலுவலகம் உள்ளது. 5 மாடி கட்டடமான அந்த அலுவலகம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாகத் தெரிவித்து, அதை இடிக்கும் பணியை மாவட்ட நிா்வாகம் சனிக்கிழமை தொடங்கியது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக, அபிஷேக் பானா்ஜி தலைமை செயல் அதிகாரியாக உள்ள லீப்ஸ் அன்ட் பெளன்ட்ஸ் தனியாா் நிறுவனம், கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

Advertisement

Advertisement

இந்த மனுவை நீதிபதி ராஜா பாசு செளதரியின் சிறப்பு அமா்வு ஞாயிற்றுக்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதி கூறியதாவது: இந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை அல்லது ஜூலை இறுதி வரை, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை அபிஷேக் பானா்ஜியின் தொகுதி அலுவலகத்தை அதிகாரிகள் இடிக்கக் கூடாது. அந்தக் கட்டடம் தற்போது உள்ளதைப் போலவே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா். மேலும் இந்த மனுவை வழக்கமான நீதிபதிகள் அமா்வு, அடுத்த முறை விசாரிக்கும் என்றும் நீதிபதி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments