FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!

தில்லி ஜந்தர் மந்தர் திடலுக்கு முடிந்தவரை உடனடியாக ஆதரவாளர்கள் திரள வேண்டும் என அபிஜீத் தீப்கே கோரிக்கை வைத்துள்ளது குறித்து...

Updated On : 19 ஜூலை 2026, 6:35 pm IST
அபிஜீத் தீப்கே / போராட்டக்களத்தில் இளைஞர்கள் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

தில்லி ஜந்தர் மந்தர் திடலுக்கு முடிந்தவரை உடனடியாக ஆதரவாளர்கள் திரள வேண்டும் என கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று (ஜூலை 19) அழைப்பு விடுத்தார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் நிர்ணயித்தபடி ஜூலை 20 ஆம் தேதி (நாளை) நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல வேண்டும் எனவும், அமைதியான வழியில் அனைவரும் ஒன்று திரள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நீட் முறைகேடுகளைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தில்லி ஜந்தர் மந்தர் திடலில் போராட்டத்தைத் தொடங்கினர்.

Advertisement

Advertisement

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தில்லியில் உள்ள சஃப்தார்ஜங்க் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, சோனம் வாங்சுக் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

ஜந்தர் மந்தர் திடலில் உண்ணாவிரதம் இருந்துவரும் அவர், சோனம் வாங்சுக் விருப்பப்படி ஜூலை 20 ஆம் தேதி மாபெரும் பேரணி செல்ல வேண்டும் எனவும் இதற்கு ஆதரவாளர்கள் திரள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக விடியோ வெளியிட்டுள்ள அபிஜீத் தீப்கே, சோனம் சார் விருப்பப்படி ஜூலை 20 ஆம் தேதி பேரணி செல்ல வேண்டும். அனைத்து ஆதரவாளர்களும் ஜந்தர் மந்தரில் திரள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

நமது போராட்டமும் பேரணியும் இனியும் அமைதியான முறையில் நடக்கும். யாரேனும் எதிர்மறையான முழக்கங்களை எழுப்பினாலோ, இடையூறுகளை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டாலோ அவர்கள் சோனம் சாரின் ஆதரவாளராகவோ அல்லது கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் ஆதரவாளராகவோ இருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

March on 20 July will take place as Sonam Sir has decided abhijeet dipke cockroach janta party

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments