FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!

மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை...

Updated On : 24 ஜூலை 2026, 10:42 am IST
நேற்று சோனம் வாங்சுக்கை சந்தித்த அமைச்சர் ஜெ.பி. நட்டா. - ANI
பகிர்:

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் இன்று பகல் 12.30 மணிக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்கின்றனர்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா கூறுகையில்,

"தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடரும் என்பதை நாங்கள் மிகத் தெளிவாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். நள்ளிரவு 12.30 மணிக்கு பிரதமர் ஒரு காணொளியை வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதிலிருந்து அவர் மீது மிகுந்த அழுத்தம் இருப்பது தெளிவாகிறது. மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

தர்மேந்திர பிரதானை நீக்குவது மட்டுமே மிகக் கடுமையான நடவடிக்கையாக இருக்க முடியும். அப்போதுதான் இந்தியாவின் இளைஞர்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை இருக்கிறது என்பதை நாங்கள் நம்புவோம்.

இன்று பகல் 12.30 மணிக்கு இந்திய போட்டி ஆணையத்தில் (சிசிஐ) -யில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவுடன் ஒரு கூட்டம் நடைபெறவுள்ளது.

அதற்கு முன்னதாக, காலை 11 மணிக்கு நாங்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்துவோம்" என்று கூறினார்.

இன்று நடைபெறும் சந்திப்பில் ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபியின் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி விடியோ வெளியிட்டுள்ளதால் சிஜேபியின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

summary

CJP meet union minister JP nadda today for discussion

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments