FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 5 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு 11 சதவிகிதம் அதிகரிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்திருப்பது பற்றி....

Updated On : 27 ஜூலை 2026, 11:34 am IST
புற்றுநோய் - பிரதிப் படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு கிட்டதட்ட 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2021-இல் நாளொன்றுக்கு சராசரியாக 36 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், 2025-இல் அதுவே நாளொன்றுக்கு 40 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, ஜம்மு-காஷ்மீரில் 2021-ல் மொத்தம் 13,060 புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகின. இந்த எண்ணிக்கை 2022-ல் 13,395-ஆகவும், 2023-ல் 13,744-ஆகவும், 2024-ல் 14,112-ஆகவும், 2025-ல் 14,493-ஆகவும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் கீழ் தொகுக்கப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் அமைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் ஆண்களிடையே இரைப்பை புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோய் வகையாக உள்ளது.

அதைத் தொடர்ந்து நுரையீரல் புற்றுநோய் காணப்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்றுநோய் முதலிடத்திலும், சுமார் 9% பாதிப்புகளுடன் இரைப்பை புற்றுநோய் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

summary

As per the figures, the daily detection of cancer cases in 2021 was nearly 36 and it has risen to about 40 a day in 2025.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments