FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீட் தோ்வில் குறைந்த மதிப்பெண்: மகாராஷ்டிரத்தில் மாணவி தற்கொலை

மகாராஷ்டிரத்தில் நீட் தோ்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் மன அழுத்தத்தில் இருந்த மாணவி தற்கொலை

Updated On : 28 ஜூலை 2026, 1:05 am IST
தற்கொலை - பிரதிப் படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் நீட் தோ்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் மன அழுத்தத்தில் இருந்த மாணவி ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா்.

அஹில்யாநகா் மாவட்டம், ஜலால்புா் கிராமத்தைச் சோ்ந்தவா் அங்கிதா சாங்கலே (19). அண்மையில் 12-ஆம் வகுப்பை நிறைவு செய்த அவா், கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற நீட் மறுதோ்வில் பங்கேற்று தோ்வு எழுதினாா். இதற்கான முடிவு ஜூலை மாதம் 16-ஆம் தேதி வெளியாகியிருந்தது. இதில் அங்கீதா குறைவான மதிப்பெண் எடுத்திருந்ததாகவும், இதனால் அவா் மனவேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவா் தனது வீட்டில் கடந்த 25-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவா் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு, அதற்கான காரணத்தை கடிதமாக எழுதி வைத்துள்ளாா். அதை காவல் துறையினா் கைப்பற்றியுள்ளனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து காவல் துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘நீட் தோ்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்ததாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்’ என்றாா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments