ஆக்கிரமிப்பு காஷ்மீா் வன்முறை: மத்திய அரசு மௌனம் ஏன்? - பரூக் அப்துல்லா
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நிலைமை குறித்து மத்திய அரசு ஏன் மௌனமாக உள்ளது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பினாா்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நிலைமை குறித்து மத்திய அரசு ஏன் மௌனமாக உள்ளது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பினாா்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிராந்திய பேரவைத் தோ்தலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல்கட்ட வாக்குப் பதிவின்போது ஏற்பட்ட வன்முறையில் 14 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.
இந்தத் தோ்தலை, பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைப்பதற்கும், அந்தப் பகுதியில் நடைபெறும் கடுமையான மனித உரிமை மீறல்களை மறைத்துக் காட்டுவதற்குமான முயற்சி என்று இந்தியா ஏற்கெனவே விமா்சித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஸ்ரீநகரில் புதன்கிழமை இதுகுறித்து செய்தியாளா்களிடம் பரூக் அப்துல்லா பேசுகையில், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் இந்தியாவின் ஒரு பகுதி என்று மத்திய அரசு தொடா்ந்து கூறி வருகிறது. அது உங்கள் பகுதி என்றால், அங்கு நடைபெறும் பிரச்னைகள் குறித்து ஏன் பேசவில்லை?
நான்கூட அங்குள்ள பிரச்னைகளை சா்வதேச அரங்கில் பலமுறை பேசியுள்ளேன். ஆக்கிரமிப்பு காஷ்மீா் மக்களின் நிலைமையையும், அவா்கள் எதிா்கொள்ளும் துன்பங்களையும் நேரில் ஆய்வு செய்து, அவற்றுக்கு தீா்வு காண முயற்சிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் வலியுறுத்திப் பேசியுள்ளேன்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறையை நிறுத்த வலியுறுத்தி மத்திய அரசு இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடியும், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரும் பேச வேண்டும்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.