FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பதற்றம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அண்மைக்காலமாக நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

Updated On : 19 ஜூலை 2026, 2:04 am IST
பகிர்:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அண்மைக்காலமாக நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வரும் 27-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அமைதி காக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் உயா் ஆணையா் வோல்கா் துா்க் வேண்டுகோள் விடுத்தாா். மேலும், வன்முறை காரணமாக இறந்த போராட்டக்காரா்கள், பாதுகாப்புப் படையினரின் மரணங்கள் குறித்து நியாயமான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தவும் அவா் வலியுறுத்தினாா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ‘ஜேஏஏசி’ சிவில் சமூக அமைப்பை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தடை செய்து, அதன் முக்கியத் தலைவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இதனால், கடந்த மாதம் முதல் தொடா் போராட்டங்களும், மோதல்களும் வெடித்துள்ளன. இதனால் அப்பகுதியில் இணையச் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments