தோல்வியடைந்த அமித் ஷா பதவி விலக வேண்டும்: சிஜேபி நிறுவனர் அபிஜீத்
மத்திய அமைச்சர் அமித் ஷா பதவி விலகல் குறித்த ராகுல் காந்தியின் கோரிக்கைக்கு சிஜேபி நிறுவனர் ஆதரவு பற்றி...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கோரிக்கையை ஆதரிப்பதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.
மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜிநகரில் செய்தியாளர்களுடன் அபிஜீத் தீப்கே பேசியதாவது, "இன்றைக்கு நீதித் துறை மீதுகூட கேள்விகள் எழுப்ப முடிகிறது. ஆனால், ஆளும் அரசை நோக்கி கேள்விகள் எழுப்ப முடிவதில்லை. சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் போன்ற மாநில கட்சிகளை உடைப்பதற்காக அமலாக்கத் துறை, சிபிஐ ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டதை நாம் அறிவோம்.
ஜனநாயகத்தை பாதுகாப்பது எதிர்க்கட்சிகளின் பிரச்னை மட்டுமல்ல. நாட்டின் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தில்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தியதன் விளைவாகவே தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். தற்போது புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசுபவரை கல்வி அமைச்சராகக் கொண்டு வந்ததன் மூலம் நாட்டுக்கு என்ன செய்தி சொல்ல வருகின்றனர்? பாஜகவில் ரௌடிகள்தான் அதிகம் நிரம்பியுள்ளனர். இந்த அரசில் ரௌடிகளுக்கும் குற்றவாளிகளுக்கும்தான் ஆதரவாகச் செயல்படுகிறது.
தில்லியில் ஜூலை 20 ஆம் தேதி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்த உத்தரவிட்டது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாதான், வேறு யாரும் இல்லை. அவர் பதவி விலக வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கோரிக்கையை முழுமையாக ஆதரிக்கிறேன்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி வருவதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவ்வாறு உண்மையாக இருந்தால், அது அமித் ஷாவின் தோல்வியைத்தான் காட்டுகிறது. வெளிநாட்டிலிருந்து இயங்கும் ஓர் இயக்கத்தைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லையா?
எங்கள் போராட்டத்துக்கு விவசாய சங்கத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றே நினைப்பார்கள். அதனால் எங்களுடன் போராட்டக் களத்தில் நின்றனர். நாங்களும் அவர்களுக்கு ஆதரவாக நிற்போம். நானும் விவசயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான்" என்று தெரிவித்தார்.
CJP founder Abhijeet Dipke seeks Amit Shah's resignation over student protest crackdown
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.