என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கே
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியது பற்றி...
தர்மேந்திர பிரதான் பதவி விலகியதால் என்னை ஹீரோ ஆக்காதீர்கள் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கடந்த ஜூன் 20 முதல் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், இளைஞர்களின் கோரிக்கைக்கு பாஜக அரசு செவி சாய்த்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார்.
பிரதமர் மோடி அரசின் வரலாற்றில் முதல்முறையாக போராட்டங்களுக்கு பணிந்து ஓர் அமைச்சர் பதவி விலகியுள்ளார்.
Advertisement
Advertisement
முதல்கட்ட வெற்றி என சிஜேபி கட்சியினர், இளைஞர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்
இந்நிலையில் போராட்ட நிகழ்விடத்தில் பேசிய சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே, 'இது மாணவர்களும் இளைஞர்களுக்கும் கிடைத்த வெற்றி. ஜனநாயகம் வென்றது.
மீண்டும் தவறு செய்யாதீர்கள். தர்மேந்திர பிரதான் பதவி விலகியதால் என்னை ஹீரோ ஆக்காதீர்கள். ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகி விட்டது. அந்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம்.
மக்களால் மட்டுமே உறுதியான ஜனநாயகம் உருவாக்கப்படுகிறது. தனிப்பட்ட ஒருவரால் உருவாக்கப்படுவதல்ல. ஹீரோவை விட பொறுப்பேற்றுக்கொள்வதுதான் முக்கியமானது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ், தில்லி காவல்துறை மன்னிப்பு கேட்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்" என்றும் கூறியுள்ளார்.
ஜூலை 20 போராட்டத்தின்போது இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் மீது தில்லி காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அபிஜீத் தீப்கே கூறியது குறிப்பிடத்தக்கது.
Don't make me a hero; The entire nation was ruined because someone was made a hero: Abhijeet dipke
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.