நாட்டின் சிறந்த முதல்வர் மு.க. ஸ்டாலின்! அபிஜீத் தீப்கே கருத்து
நாட்டின் சிறந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் என அபிஜீத் தீப்கே தெரிவித்த கருத்து பற்றி...
நாட்டின் சிறந்த முதல்வர்களாக மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரின் பெயர்களை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஜென் ஸீ கருத்தரங்கில் கலந்துகொண்ட அபிஜீத் தீப்கேவிடம் ராபிட் ஃபையர் கேள்விகள் கேட்கப்பட்டன.
அப்போது இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் யார்? என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement
அதற்கு, “தமிழ்நாட்டின் மு.க. ஸ்டாலின், கேரளத்தின் பினராயி விஜயன் மற்றும் தில்லியின் அரவிந்த் கேஜரிவால்” என்று அபிஜீத் தீப்கே பதிலளித்தார்.
தமிழ்நாட்டை பொருளாதாரத்தில் சிறந்த மாநிலமாக மு.க. ஸ்டாலினும், கேரளத்தை சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக பினராயி விஜயனும், தில்லியை கல்வியின் சிறந்த மாநிலமாக அரவிந்த் கேஜரிவாலும் மாற்றியதாக அவர் குறிப்பிட்டார்.
அபிஜீத் தீப்கேவின் கருத்தை விமர்சித்திருக்கும் பாஜகவின் முன்னாள் நிர்வாகி ஷெஹ்சாத் பூனாவாலா வெளியிட்ட பதிவில், “சிஜேபி-ஐவிட பெரிய மோசடி கும்பலை நீங்கள் பார்த்துள்ளீர்களா? அவர்கள் கருத்துபடி நாட்டின் சிறந்த முதல்வர்கள் மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கேஜரிவால். பின்னர் மக்கள் அவர்களை நிராகரித்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
M.K. Stalin is the country's best Chief Minister! – Abhijeet dipke
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.