FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முறையான தேர்வுக்காக ஒவ்வொரு முறையும் மாணவர்கள் போராட வேண்டுமா? அபிஜீத் தீப்கே

முறையான தேர்வுக்காக மாணவர்கள் ஒவ்வொருமுறையும் போராட்டம் நடத்த வேண்டுமா? என அபிஜீத் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளது குறித்து...

அபிஜீத் தீப்கே - ANI
பகிர்:

முறையான தேர்வுக்காக மாணவர்கள் ஒவ்வொருமுறையும் போராட்டம் நடத்த வேண்டுமா? என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று (ஆக. 30) தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

மும்பை உயர்நீதிமன்றத் தேர்வில் முறைகேடுகள் நடந்தன. பல மையங்களில் சுட்டிகள் (mice) மற்றும் விசைப்பலகைகள் (keyboards) வேலை செய்யவில்லை, சில இடங்களில் ஐந்து நிமிடங்களிலேயே சர்வர்கள் செயலிழந்தன. இதனால், பல மாணவர்கள் தேர்வை முழுமையாக எழுதி முடிக்கு முன்பே தோல்வி அடைந்ததாக குறிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

மாணவர்கள் காலை முதலே இங்கு போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று அவர்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்றும், முந்தைய தேர்வு முயற்சி ரத்து செய்யப்படும் என்றும் மும்பை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது;

இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் பாராட்டுகிறோம். இருப்பினும், நான் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்: ஏன் இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது? ஒரு தேர்வு முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்ய ஒவ்வொரு முறையும் மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டுமா?

எத்தனை முறை தேர்வை ரத்து செய்வீர்கள்? எத்தனை முறை தேர்வை நடத்துவீர்கள்? மீண்டும் தேர்வை நடத்தும்போது, ​​சமீபத்திய குளறுபடிகளைத் தயவுசெய்து கருத்தில் கொள்ளுங்கள். தேர்வு நடத்தத் தகுதியற்ற மையங்களைப் பட்டியலிட்டு தடை செய்யுங்கள்

இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். மாணவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கக் கூடாது; படித்துக்கொண்டிருக்க வேண்டும். படிப்பது மற்றும் தேர்வுகளை எழுதுவதுதான் அவர்களின் பணி. அவர்களைப் போராடத் தூண்டுவது அரசின் தோல்வியே என தீப்கே குறிப்பிட்டார்.

summary

Must students struggle every time for a proper examination Abhijeet Dipke

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments