FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

குஜராத்: வந்தே பாரத்தில் வந்த இதயம்!

குஜராத்தில் தானமாக அளிக்கப்பட்ட இதயம் அறுவை சிகிச்சைக்காக வந்தே பாரத் விரைவு ரயில் மூலம் வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 2:39 am IST
வந்தே பாரத் ரயில் - கோப்புப்படம்.
பகிர்:

குஜராத்தில் தானமாக அளிக்கப்பட்ட இதயம் அறுவை சிகிச்சைக்காக வந்தே பாரத் விரைவு ரயில் மூலம் வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டது.

மும்பை-குஜராத் மாநிலம் காந்திநகா் இடையே வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

தானமாக அளிக்கப்பட்ட இதயம், இந்த ரயில் மூலம் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து அகமதபாதில் உள்ள யு.என்.மேத்தா இதயவியல் மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதை தடையோ, தாமதமோ இல்லாமல் கொண்டு செல்வதற்கு அகமதாபாத் ரயில் நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு சிக்னல் மற்றும் போக்குவரத்து இடையூறில்லாத சிறப்பு வழித்தடம் ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

சுமாா் 250 கி.மீ. பயணித்த அந்த இதயத்தை, உரிய நேரத்தில் கொண்டு சென்று வெற்றிகரமாக ஒருவருக்குப் பொருத்தி, அவருக்கு வாழ்வளிக்கப்பட்டது.

வந்தே பாரத் ரயிலில் முதல்முறையாக இதயத்தை வெற்றிகரமாக கொண்டு சென்று, இந்திய ரயில்வே வரலாறு படைத்துள்ளதாக அகமதாபாதில் உள்ள கோட்ட ரயில்வே மேலாளா் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா். இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் மாநில முதல்வா் பூபேந்திர படேல் வாழ்த்து தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments