கர்நாடகத்தின் புதிய துணை முதல்வராக ஜி. பரமேஸ்வரா பதவியேற்பு!
கர்நாடகத்தின் புதிய துணை முதல்வராக ஜி. பரமேஸ்வரா பதவியேற்றுள்ளது குறித்து...
கர்நாடகத்தின் புதிய துணை முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி. பரமேஸ்வரா பதவியேற்றுக்கொண்டார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கடந்த மே 28 அன்று பதவி விலகினார். இதையடுத்து, துணை முதல்வாரகப் பதவி வகித்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் கர்நாடகத்தின் புதிய முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கர்நாடக ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை (ஜூன் 3) மாலை 4.05 மணிக்குத் துவங்கிய விழாவில், கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்றுக்கொண்டார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கர்நாடகத்தின் புதிய துணை முதல்வராக ஜி. பரமேஸ்வராவுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
முன்னதாக, கர்நாடக துணை முதல்வர் பதவிக்கு மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.ஹெச். முனியப்பா, ஜி. பரமேஸ்வரா, பிரியங்க் கார்கே, ஈஸ்வர் காந்த்ரே, சித்தராமையாவின் மகன் யதீந்திரா ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.
Senior Congress leader G. Parameshwara took oath as the new Deputy Chief Minister of Karnataka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.