மாமியாரைத் திருமணம் செய்துகொண்ட மருமகன்! தமிழ்நாட்டில் அல்ல, உ.பி.யில்!
உ.பி.யில் மருமகனை மாமியார் திருமணம் செய்துகொண்டது பற்றி...
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது மருமகனை நீதிமன்ற வளாகத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் விடியோ இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த திருமணமானது லக்னெள மாவட்டம் அக்பர்பூர் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான காணொலி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சமூக ஊடகங்களில் பரவி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விடியோவில் மாமியாரும் மருமகனும் மாலை அணிந்தவாறு, திருமணச் சான்றிதழுடன் நிற்பதை காண முடிகின்றது.
Advertisement
Advertisement
மேலும், தங்களின் உறவுமுறையை நியாயப்படுத்தும் வகையில், தங்கள் திருமணத்தை ஏற்று ஆதரிக்குமாறு பொதுமக்களுக்கு அந்த காணொலியில் இருவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்தப் பெண்ணுக்கும் அவரது மருமகனுக்கும் இடையே நீண்ட காலமாக நெருங்கிய உறவு இருப்பதாக அக்பர்பூர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து புகார் எதுவும் வரவில்லை. இதுதொடர்பாக யாரும் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.
மேலும், திருமணம் நடைபெற்ற நேரம் மற்றும் இடம் குறித்த விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்படும் உண்மைத்தன்மை குறித்து காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Son-in-law marries mother-in-law - Not in Tamil Nadu, but in UP
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.