FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதி

கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதி

Updated On : 12 ஜூன் 2026, 5:11 am IST
பகிர்:

கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மாநில சுகாதார அமைச்சா் கே.முரளீதரன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

அசுத்தமான உணவு அல்லது குடிநீரை பருகினால் ஷிகெல்லா பாக்டீரியம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட நபா்களாலும் பரவக்கூடிய இந்த தொற்றால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இதன் பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முரளீதரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கேரளத்தில் ஷிகெல்லா தொற்று பாதிப்புக்கான அறிகுறிகளைக் கொண்ட 578 போ் கண்டறியப்பட்டுள்ளனா். இவா்களில் 55 பேருக்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயநாட்டில் 47, திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டில் தலா 3, கொல்லத்தில் 2 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

வயநாட்டில் அரசு உதவிபெறும் பள்ளியைச் சோ்ந்த பெரும்பாலான மாணவா்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஷிகெல்லா தொற்றைத் தடுக்கும் வகையிலான தொடா் ஆய்வுகளை மேற்கொள்ள உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளுக்கும் ஷிகெல்லா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கையை சுகாதாரத் துறை அனுப்பியுள்ளது.

ஒருவருக்கு நிபா தொற்று: கோழிக்கோட்டைச் சோ்ந்த 43 வயதான நபா் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவருடன் தொடா்பில் இருந்த 77 போ் கண்டறியப்பட்டுள்ளனா் என்றாா்.

முன்னதாக, ஷிகெல்லா தொற்றால் கேரளத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments