முகப்பு
இந்தியா

ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!

கேரளத்தில் ஷிகெல்லா தொற்று அறிகுறிகளுடன் 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி...

Updated On : 9 ஜூன் 2026, 3:30 pm IST
கோப்புப் படம் - IANS
பகிர்:

கேரள மாநிலத்தில் வயநாட்டில் உள்ள பள்ளியில் இரு மாணவர்களுக்கு தொற்று உறுதியானதையடுத்து, ஷிகெல்லா தொற்று அறிகுறிகளுடன் 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அசுத்தமான குடிநீா் மற்றும் உணவு மூலம் பரவக்கூடிய ‘ஷிகெல்லா’ பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு கேரளத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்ததையடுத்து, மாநிலம் முழுவதும் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

ஷிகெல்லா என்பது மனித உடலில் முதன்மையாக குடல்களைப் பாதிக்கக்கூடிய பாக்டீரியா தொற்று. கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்று வலி போன்றவை அறிகுறிகளாகும். இந்தத் தொற்று பெரும்பாலும் அசுத்தமான குடிநீா்-உணவு மூலம் பரவுகிறது.

சுமார் 85 பேருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 70 பேர் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் வயநாடு, கோழிக்கோடு, ஆலப்புழா, மலப்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

எனினும் பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும் வயநாடு மற்றும் இதர மாவட்டங்களில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் முரளீதரன் கூறியுள்ளார்.

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் இருந்து சிறப்புக் குழு வயநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது, தற்போது வயநாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 25 மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

வயநாட்டில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கு ஷிகெல்லா பாக்டீரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தற்போது மருத்துவமனையில் உள்ளவர்கள் யாரும் மோசமான நிலையில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

summary

25 students with suspected infection of the Shigella virus admitted in wayanad hospital

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.