போராட்டத்திற்கு தட்டு, கரண்டியோடு வாருங்கள்! மோடியைக் கிண்டல் செய்த கரப்பான்பூச்சி கட்சி!
தில்லி ஜந்தர் மந்தரில் இன்று நடைபெறும் போராட்டத்திற்கு கரப்பான்பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே அழைப்பு...
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் தற்கொலைக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் இன்று பிற்பகல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்திற்கு வருவோர் தட்டு, கரண்டி எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் முக்கிய இயக்கங்களில் ஒன்றாக உருவாகியுள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு முறைக்கேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஜூன் 6 அன்று முதல் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் லட்சக்கணக்கான மாணவர்களும் கலந்துகொண்டு வருகின்றனர்.
தில்லி, புணே, ஜெய்ப்பூர், நாக்பூர், அமிர்தசரஸ், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நடத்திய போராட்டங்களில் பிரபலங்கள் பலரும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள் ஆகியவற்றுக்கு எதிராகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி இன்று(ஜூன் 20) பிற்பகல் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டத்திற்கு வருவோர் தட்டு, கரண்டி எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே அழைப்பு விடுத்துள்ளார்.
கரோனா காலத்தில், முன்களப் பணியாளர்களுக்கு ஆதரவாக தட்டுகளின் மூலம் ஒலி எழுப்பி ஆதரவு தெரிவிக்குமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததைக் கிண்டல் செய்யும் பாணியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அழைப்பு விடுத்துள்ளார்.
Come to the protest with plates and spoon in delhi: Cockroach Janata Party
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.