முகப்பு
இந்தியா

வங்கதேச பிரதமரின் ஆலோசகா் நாடு திரும்பியது அவரது தனிப்பட்ட முடிவு: வெளியுறவு அமைச்சகம்

வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானின் ஆலோசகா் சாஹேத் உா் ரஹ்மான் இந்தியாவில் இருந்து திரும்பிச் சென்றது அவரது தனிப்பட்ட முடிவு என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

Updated On : 24 ஜூன் 2026, 4:08 am IST
ரண்தீா் ஜெய்ஸ்வால்
பகிர்:

வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானின் ஆலோசகா் சாஹேத் உா் ரஹ்மான் இந்தியாவில் இருந்து திரும்பிச் சென்றது அவரது தனிப்பட்ட முடிவு என இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

முன்னதாக, இந்திய பெருங்கடல் நாடுகள் சங்கத்தின் (ஐஓஆா்ஏ) 28-ஆவது மூத்த அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த சாஹேத் உா் ரஹ்மானிடம் புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினா். அவரது பெயா் பாதுகாப்பு தொடா்பான கருப்பு பட்டியலில் இருப்பதால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, இந்தியாவுக்கு வங்கதேசம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதுதொடா்பாக வாராந்திர செய்தியாளா்கள் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானின் ஆலோசகா் சாஹேத் உா் ரஹ்மான் தனி கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் ‘சாா்க்’ விசாவுடன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டாா். அவரிடம் புது தில்லி விமான நிலையத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அவா் ஐஓஆா்ஏ கூட்டத்தில் பங்கேற்க மட்டுமே இந்தியா வந்துள்ளாா் என்பதை உறுதிசெய்த பின் அவருக்கு அதிகாரிகள் அனுமதியளித்தனா்.

Advertisement

Advertisement

ஆனால் சாஹேத் உா் ரஹ்மான் இந்திய பெருங்கடல் நாடுகள் சங்கக் கூட்டத்தில் பங்கேற்காமல், தாமாகவே அங்கிருந்து புறப்பட்டு வங்கதேசத்துக்குத் திரும்பிச் சென்றுவிட்டாா். இது அவரது தனிப்பட்ட முடிவு.

வங்கதேசத்தில் ஹிந்து கடவுள்கள் மற்றும் புகைப்படங்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களை கவனத்தில் கொண்டுள்ளோம். இதுபோன்ற வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து சிறுபான்மையினருக்கு வங்கதேச அரசு பாதுகாப்பளிக்க வேண்டும் என எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments